ஸ்ரீநகர்: ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவத்தின் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. ராஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பேனி செக்டாரில் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. மோதலில் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் இல்லை. கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.