மும்பை: 63 மூன் டெக்னாலஜிஸ் நிறுவனம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடர்ந்த ஊழல் வழங்கில், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என சிபிஐ மும்பை உயர்நீதி மன்றத்தில் தகவல் தெரிவித்து உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு எதிராக ரூ.10 ஆயிரம்கோடி இழப்பீடு கேட்டு, 63 மூன் டெக்னாலஜிஸ் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
3 மூன் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் 15ந்தேதி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சக முன்னாள் கூடுதல் செயலாளர் கே.பி. கிருஷ்ணன், பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷனின் முன்னாள் தலைவர் ரமேஷ் அபிஷேக் ஆகியோர் மீது சிபிஐல் ஊழல் புகார் அளித்தது. அதில், ப.சிதம்பரம் உள்ளிட்ட 3 பேர் அவர்களது ள் உத்தியோகபூர்வ பதவிகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும், நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (என்எஸ்இஎல்) இல் பல கோடி செலுத்தும் இயல்புநிலை மோசடி வெளிச்சத்திற்கு வந்தபோது நிறுவனத்திற்கு சேதம் விளைவித்ததாகவும் அது குற்றம் சாட்டியது.
இந்த புகார் குறித்து சிபிஐ மேல் நடவடிக்கை எடுக்காததால், அந்த நிறுவனத்தின் சார்பில், நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.