கவுகாத்தி: என்ஆர்சி மற்றும் சிஏஏ ஆகியவற்றுக்கு அடுத்து, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘இஐஏ 2020’, வடகிழக்கு மாநிலங்களுக்கான, குறிப்பாக, அஸ்ஸாம் மாநிலத்திற்கான அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
அஸ்ஸாம் மற்றும் அப்பிராந்தியத்தின் பல கட்சிகள் இக்கருத்தை முன்வைக்கின்றன.
மோடி அரசு முன்வைத்துள்ள புதிய வரைவானது, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், அங்கு வாழும் மக்களின் கருத்துக்களைப் புறந்தள்ளி, திட்ட நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாய் உள்ளது. மக்கள் பாதிக்கப்படும் ஒரு அம்சம் இதன்மூலம் புறந்தள்ளப்படுகிறது.
தனியார் ஆலோசகர்களின் மூலம், தனியார் நிறுவனங்களின் தங்களின் சொந்த இஐஏ அறிக்கைகளை தயார் செய்துகொள்ள முடியும். இந்த வாய்ப்பானது, குறிப்பிட்டப் பகுதிகளில் வாழும் பூர்வக்குடி மக்களின் உரிமைகளை கடுமையாக பாதிக்கிறது.
மத்திய அரசின் இந்த முயற்சியானது, விதிமுறை மீறலாகும், சுரண்டலுக்குரியதாகும், பொதுமக்கள் பங்களிப்பை நசுக்குவதாகும், பல்லுயிர் முடக்கம் சார்ந்தது, ஜனநாயக விரோதமானது, சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது.