தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ஆனால் மற்றொருபுறம் தமிழகஅரசு ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. இதுவரை மார்ச் 24ந்தேதி முதல் 6 கட்டமாக ஜூலை 31ந்தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு முடிவடைய உள்ள 31-ம் தேதிக்கு பிறகு, ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது, மற்றும் மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொற்று பரவல் தடுப்பு, போக்குவரத்து, சினிமா தியேட்டர்கள் உள்பட பொழுதுபோக்கு இடங்களை திறப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் விவாதிக்கப்பட உள்ளதாக கூற்பபடுகிறது.
இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், இனிமேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.