ரிசோனா

மெரிக்க்கவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்துள்ள அப்பாச்சி ரக 22 ராணுவ ஹெலிகாப்டர்களில் 9 ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2015 ஆம் வருடம் அமெரிக்காவிடம் இருந்து 22 நவீன அப்பாச்சி கார்டியன் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த வகை ஹெலிகாப்டர்கள் விமானி உள்ளிட்ட இருவர் பயணம் செய்யும் வச்தி கொண்டதாகும். மணிக்கு 293 கிமீ வேகத்தில் இவை பறக்கும் ஆற்றல் கொண்டவைகள் ஆகும்.

இந்த 22 ஹெலிகாப்டர்களில் தற்போது முதல் கட்டமாக 9 ஹெலிகாப்டர்கள் தயாராகி உள்ளன. அவற்றை அமெரிக்காவில் உள்ள அரிசோனா விமான நிலையத்தில் வைத்து இந்திய விமானப்படையிடம் அமெரிக்கா ஒப்படைத்டுளது. இவை விரைவில் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட உள்ளன. மீதமுள்ள 13 விமானங்கள் வரும் 2020ல் தயாராகும் என கூறப்படுகிறது.