கொரோனாவுக்கு 99 டாக்டர்கள் உயிர் இழந்த சோகம்..
கொரோனா தடுப்பு பணியில் முன் வரிசையில் நிற்பவர்கள், டாக்டர்கள்.
வைரஸ் தங்களைத் தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையிலும், உயிரைத் துச்சமாக மதித்துச் சேவையாற்றுகிறார்கள், மருத்துவர்கள்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 99 டாக்டர்கள் உயிர் இழந்துள்ளதாக இந்திய மருத்துவ கழகம் திடுக்கிடும் தகவலைத்  தெரிவித்துள்ளது.
இந்த தொற்றினால் ஆயிரத்து 302 டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ கழகம் கூறியுள்ளது.
உயிர் இழந்த மருத்துவர்களில் 7 பேர் 25 வயதுக்கும் குறைவான இளம் மருத்துவர்கள் என்பது மனதை உருக்கும் தகவல்.
‘’கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டாக்டர்களில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவோரே அதிகம்’’ என்று குறிப்பிட்டுள்ள இந்திய மருத்துவ கழகம்’’ தங்கள் மருத்துவமனையில் உள்ள  வசதிகளைக் கருத்தில் கொள்ளாமல்  கூடுதலாகத் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை அனுமதிக்கின்றன’ எனக் குற்றம் சாட்டியுள்ளது.
-பா.பாரதி.