புதுடெல்லி: அமர்நாத் யாத்திரை துவங்கிய கடந்த ஜுலை 1 முதல், கடந்த 7 நாட்களில், 95,923 யாத்ரிகர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை, ஜுலை 1ம் தேதி துவங்கியது முதல் இதுவரையில் 95,923 யாத்ரிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

அதேநேரத்தில், ஹிஸ்புல் கமாண்டர் புர்ஹான் வானி, பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டதையடுத்து, பிரிவினைவாதிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை காரணமாக, எந்த யாத்ரிகரும் ஜம்முவிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்த யாத்திரை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ஷர்வன் பூர்ணிமா திருநாளை ஒட்டி நிறைவடையும். அமர்நாத் குகைக் கோயில், கடல் மட்டத்திலிருநூது 3888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பனி லிங்கத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்துக்கள், புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.

இந்த அமர்நாத் யாத்திரை செல்லும் இந்து பக்தர்களுக்கு, வழியில் கிராமங்களில் வாழும் முஸ்லீம்கள், காலங்காலமாக உதவிகள் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.