கரூர்:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 96வயது மூதாட்டி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக எந்தவொரு புதிய தொற்றும் கண்டறியப்படாத நிலையில் விரைவில் பச்சை மண்டலமாக மாறும் நிலை உருவாகி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் இதுவரை 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் 41 பேர் ஒருவர் பின் ஒருவராக வீடு திரும்ய நிலையில், தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் இன்னும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை டீன் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக கரூர் மாவட்டம் பச்சை மண்டலமாக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அதேவேளையில், கரூர் மருத்துக் கல்லூரியில் சிகிச்சை பெற்ற நாமக்கல் கிராம சுகாதார செவிலியர் ஒருவர் நேற்று வீடு திரும்பிய நிலையில், நாமக்கல், திண்டுக்கல்லை சேர்ந்த 20 சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.