தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 94.3 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 13-ம் முதல் ஏப். 3-ம் வரை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு எழுத 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 8.17 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் இன்று வெளியிட்டார். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 94.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம்.
முதல்முறையாக உயர்கல்வி குறித்த சந்தேகங்களைத் தீர்க்க பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 14417 என்ற உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.