வார ராசி பலன்:  கணிப்பவர்: “100 பர்சென்ட் கரெக்ட்” ஜோதிட வல்லுனர் திலக்
 20.01.2016 முதல் 26.01.2016வரை  [தை  6ம்தேதி புதன்கிழமை முதல்  12ம்தேதி செவ்வாய்கிழமை வரை]
 
மேம்:
மேஷ ராசி நேயர்களே…!

 இந்த வாரம் உங்கள் ராசிக்க ஐந்தில் ராகு,ஆறில் குரு வக்கிரம் பெற்றிருக்கிறார்கள்.  ஏழில் செவ்வாய் ,எட்டில் சனிபகவானும், ஒன்பதில் புதன்சுக்கிரனும்,பத்தில் சூர்யனும் பதினொன்றில் கேதுவும் வீற்றிருக்கிறார்கள்.  சந்திரபகவான் உங்கள் ராசிக்கி தனஸ்தானத்தில் இருக்கும்போது இந்த வாரம் தொடங்குகிறது.
. ஐந்தில் இருக்கும் ராகு அஷ்டமசனியும் ஆதிபத்தியத்தை குறைத்து குல தெய்வ ஆசியையும் சேர்ந்து கொடுப்பதாலும் விரயாதிபதி ஆறில் வக்கிரம் பெறுவதால் மிகுந்த நண்மைகளை அளிக்கும் வாரம் இது.
 பல நாட்களாக தடங்கள் ஏற்படுத்திய காரியங்கள் இன்று முதல் ஒவ்வென்றாய் நடக்கும்.! சொத்துக்களை விற்கமுடியாமல் இருந்த நீங்கள் இந்தவாரம் நல்ல விலைக்கு விற்பீர்கள்.  அதில் வரும் பணத்தை தொழில் முடக்க வேண்டாம்.   அந்த பணத்தை ஏதாவது ஒருவகையில் பத்திரப்படுத்தி வைத்து கொள்ளுங்கள்.
நீண்டநாட்களாக நிறைவேற்றாமல் இருந்த நேர்த்திக்கடனை இந்த வாரத்தில் நிறைவேற்றுவீர்கள்ராசிக்கு புதன்,சுக்கிரன் இனைவதால் படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குவீர்கள்!
இந்த வாரம் உங்களுக்கு ராசியான  நிறம், இளம்சிவப்பு மற்றும்வெள்ளை .!