டோக்கியோ: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிடிவாதமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி வரும் ஜப்பான் ஒலிம்பிக் கிராமத்தில் இதுவரை 35 போட்டியாளர்கள் உள்பட 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்து உள்ளது.
32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த 11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
முன்னதாக ஜப்பான் வரும் அனைவருக்கும் விமான நிலையத்திலேயே ஆர்.டி.பி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, தினசரி 30 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் வீதம் மேற்கொண்டு வருவதாகவும், அதில் கொரோனா பாதிப்பு உறுதியானர்வளை உடனடியாக தனிமைப்படுத்தி வைரஸ் பரவாமல் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் ஒலிம்பிக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
”டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஒலிம்பிக் கிராமத்தில் ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் நான்கு லட்சத்து 48 ஆயிரத்து 815 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும்,ஜூலை 1 முதல் 31 வரை 90 உறுதிப்படுத்தப்பட்ட நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் விளையாட்டு வீரர்கள் 35 நபர்கள் உள்பட மொத்தம் 90 நபர்களுக்கு இதுவரை கெபரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைமை செயல் அலுவலர் டொஷிரோ மியுட்டோ இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.
போட்டி நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!