சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 11ஆம் வகுப்பு (பிளஸ்-1) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பாட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் தெரிய வந்துள்ளது. அதுபோல தேர்வு எழுதிய அரசு பள்ளிகளில் 90.6 சதவிகித பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
இந்த கல்வி ஆண்டில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவர்கள் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களின் 93.3% மாணவர்களும் , 96.5% மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 95% பேர் தேர்ச்சி அடைந்து உடைந்துள்ளனர்.
மாநில அளவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் 97.9% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், 97.6% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் 3வது இடத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2,636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:
அரசுப்பள்ளிகள்- 90.6%
அரசு உதவிப்பெறும் பள்ளிகள் – 96.9%
மெட்ரிக் பள்ளிகள்- 99.1%
இருபாலர் பள்ளிகளில் பயின்றோர்-96.8%
பெண்கள் பள்ளிகள்- 96.8%
ஆண்கள் பள்ளிகள்- 90.2%
பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி விகிதம்
அறிவியல் பாடப்பிரிவுகள் – 93.9%
வணிகவியல் பாடப்பிரிவுகள்- 97.4%
கலைப்பிரிவுகள் – 95.1%
தொழிற்பாடப்பிரிவுகள்- 92.3%.
பாடங்கள் வாரியாக தேர்ச்சி விகிதம்
இயற்பியல் – 94.6%
வேதியியல்- 95.7%
உயிரியல் – 97.1%
கணிதம் – 96.9%
தாவரவியல் – 91.1%
விலங்கியல்- 93%
கணினி அறிவியல் – 98.2%
வணிகவியல்- 97.7%
கணக்குப்பதிவியல் – 97.7%
இவ்வாறு அரசு தேர்வுகள் துறை தெரிவித்து உள்ளது.