சென்னை,

மிழகத்தின் தலைநகரான சென்னை திநகரில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு 9 மாடி வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பணிக்கான அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை தி.நகரில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்படும் என பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,  தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் இநத 9 அடுக்கு வாகன நிறுத்தத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதற்கான பணி,   ரூ.36 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில், முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் கட்டப்பட உள்ள இந்த அடுக்குமாடி பார்க்கிங்கில், சுமார் 800 வாகனங்கள் வரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.