சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  நேற்று ஒரே நாளில் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 4,975 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அக்டோபர்  6 மற்றும் 9ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வேட்புமனுத்தாக்கலின் முதல்நாளான, கடந்த 15ம் தேதி அன்று 500-க்கும் குறைவானவர்களே வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று (16ம் தேதி)  4,597 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். . இரண்டு நாட்களையும் சேர்த்து இதுவரை 4,975 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதுள்ளனர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

2 கட்டமாக நடைபெறுகிறது: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு…