சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவுபெறுகிறது. மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இந்த தேர்தலில் பூத் சிலிப் இல்லாவிட்டாலும், வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் மற்ற ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினர் பதவிகளுக்காக இநத் தேர்தல் நடைபெறுகிறது.
அதன்படி முதற்கட்ட தேர்தல் வரும் புதன்கிழமை (அக்.6) அன்றும், 2வது கட்ட தேர்தல் வரும சனிக்கிழமை (அக். 9) தேதிகளிலும் நடைபெற உள்ளது. மேலும், , 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வரும் சனிக்கிழமையும் (அக்.9) நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மொத்தமுள்ள 27,003 பதவிகளுக்கு 80,819 போ் தோ்தல் களத்தில் உள்ளனா். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3,346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 39 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ளது. 17,662 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
வாக்குப்பதிவானது காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில், கடைசி ஒரு மணி நேரம் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதன்பிறகு, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுக்கடைகளை திறக்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
அக்டோபர் 12ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
அக்டோபர் 20ந்தேதி வெற்றி பெற்றவர்கள் உள்ளாட்சி மன்றத்தில் பதவி ஏற்பார்கள்.