இந்த நிலையில், தடுப்பூசி விநியோகம் மற்றும் அதை செலுத்துவதில், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் பலருக்கு சரியான புரிதல் இல்லை என்றும், தடுப்பூசி குப்பியில் இருந்து தேவையான மருந்தினை எடுக்க போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை என்றும், அதன் காரணமாகவே தடுப்பு மருந்துகள் விரையம் ஆகுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் முதல்நாள் தடுப்பூசி போட்ட அன்றே 192 தடுப்பூசி டோஸ்கள் வீணடிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி பயன்படுத்தப்படும் கோவிஷில்டு தடுப்பூசி குப்பிகளில் தலா 0.5 மில்லியில் மொத்தம் 10 குப்பிகள் உள்ளன. இதேபோன்று கோவாக்சின் தடுப்பூசியில் தலா 0.5 மில்லி அளவில் மொத்தம் 20 டோஸ்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் திறக்கப்பட்ட 4 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும், இல்லையென்றால் வீணாகி விடும் என்று கூறப்படுகிறது.
தடுப்பூசி விரையத்துக்கு காரணம் Epiry date முடிந்துவிட்டதால் வீணானது என்ற தகவல்கள் பரவின. மேலும், சரியான முறையில், பாதுகாக்க தவறியதால்தான் தடுப்பூசி விரயம் எனறும், அதற்கு காரணம் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும்தான் காரணம் என்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி expiry date தாண்டியது என்று பொய் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், தடுப்பூசிகளின் shelf life 6 மாதங்கள். ஆகவே வீணாக போனது முறையான storage வசதி செய்யாததால்தான் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இல்லையேல், தடுப்பூசிகளை அதிகாரிகள் துணையுடன் ஆட்சியாளர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்திருக்கலாம் என்ற கருத்தும் உலவி வருகின்றன.
தடுப்பூசி செலுத்துவதில் செவிலியர்கள், மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் முறையான பயிற்சி பெறாதவர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாலும் தடுப்பூசி விரயம் ஆனதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் 9 சதவிகித தடுப்பூசி வீணானதற்கு முக்கிய காரணம், முன்னாள் சுகாதாரதுதுறை விஜயபாஸ்கரின் அலட்சியம் என்றே கூறப்படுகிறது. தடுப்பூசி உண்மையில் வீணானதா? அல்லது அமைச்சரால் கள்ள சந்தையில் விற்கப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.