சென்னை: தமிழ்நாட்டில் H1N1 காய்ச்சல் காரணமாக ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயும் மாஸ்க் அணிய வேண்டும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார். மாநிலத்தில் இதுவரை 96சதவிகிதம் பேர் முதல்தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் சளிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எச்1என்1 எனப்படும் இன்புளுயன்சா காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவ மனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கடந்த ஜனவரி முதல் இப்போதுவரை 9 குழந்தைகள் H1N1 வைரஸால் பாதிக்கப் பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருவதை தீவிரமாக கவனிக்கும்படி முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அனைத்து மருத்துவமனைகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், அதிமுக ஆட்சியில் தான் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம்.  சர்.பிட்டி.தியாகராயர், காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டுவந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும் என்று கூறிய அமைச்சர், தமிழ்நாட்டின்  36அரசு மருத்துவக்கல்லூரி களில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் கூறினார்.

மாநிலம் முழுவதும் இதுவரை 19 சதவிகிதம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடுக்கொண்டுள்ளனர் என கூறியவர், தமிழ்நாட்டில் 96சதவிகிதம் பேர் முதல்தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக கூறியவர், 91சதவிகிதம் பேர் 2வது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர் என்றும் கூறினார்.