சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழகஅரசுக்கு ரூ.9.54 கோடி வருமானம் கிடைத்தள்ளது என அரசு போக்குவரத்துறை தெரிவித்து உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இந்த பேருந்துகள், கடந்த 21ந்தேதி முதல் 25ந்தேதி வர இயக்கப்பட்டது. மொத்தம் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், அதன்மூலம் 2.80 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாகவும், தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் ஊர்களுக்கு திரும்பி செல்ல வசதியாக 13,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாவளி பண்டிகையொட்டி இயக்கப்பட்ட சிறப்புபேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.9.54 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. சிறப்பு பஸ்கள் மூலம் 2.80 கோடி பயணிகள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து சேவைகளில் கடந்த செப். வரை 173 கோடி பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்துள்ளார்கள் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.