சென்னை: கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 9.11 கோடி பேர் பயணம் செய்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வாகன நெரிசலில் இருந்து தப்பிக்கும் வகையில், சென்னைவாசிகள் மெட்ரோ ரயில் பயணத்தையே அதிக அளவில் விரும்பி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், மெட்ரோ ரயில் சேவையும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 8 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஆண்டில்(2023) மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2022) சென்னை மெட்ரோ ரயிலில் 6.09 கோடி பேர் பயணம் செய்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டில் மேலும் 3 கோடி பேர் அதிகமாக ரயிலில் பயணித்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.