சென்னை

மிழகத்தில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மானவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி மக்கள் ஒரே இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டது.  தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது.  இதையொட்டி ஏற்கனவே 9 ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைவருக்கும் கல்வி என்னும் அடிப்படையில் 8 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு இன்று தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவ்க்கபட்டிருந்தது.  இது தமிழக மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்

தற்போது தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மற்றும் சுயநிதி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.