சென்னை ஐ.ஐ.டி. போல் செங்கல்பட்டு மாவட்டம் திருபோரூர் அருகே உள்ள சத்ய சாய் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 30, செங்கல்பட்டில் 42, காஞ்சிபுரத்தில் 5, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளில் தலா ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மொத்தம் 16,298 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 44 ஆண்கள் 45 பெண்கள் என மொத்தம் 89 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

64 பேர் இன்று குணமடைந்த நிலையில் 499 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.