சேலம்: 85வயது திமுக தொண்டர்  இந்தி திணிப்புக்கு எதிரான ‘இந்தி ஒழிக’ என கோஷமிட்டபடி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். இரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே  தாழையூரை பேருராட்சி டி.என். பட்டிiய சேர்ந்தவர் தங்கவேலு (85). திமுக தொண்டரான இவர்,  நங்கவள்ளி ஒன்றிய திமுக முன்னாள் விவசாய அணி அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் இன்றுகாலை திடீரென தாழையூர் திமுக அலுவலகம் முன்பு ஒரு தாளில் “குடியரசு தலைவர் அவர்களே, இந்தியை திணிக்க தயவுசெய்து அனுமதி வழங்காதீர்கள், மோடி அரசே, மத்திய அரசே, இந்தியை திணிக்காதே,  இந்தி வேண்டாம். தாய்மொழி தமிழ் இருக்க, இந்தி கோணமான எழுத்து; கோமாளி எழுத்து, மாணவ, மாணவிகள் வாயில் நுழையாது, வேலைவாய்ப்பைப் பாதிக்கும் இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” -எம்.வி. தங்கவேலு, தாழையூர், பி.என். பட்டி என்று எழுதிய பதாகையை வைத்தார்.

தங்கவேலு போராட்டம் நடத்தப்போகிறார் என அங்கிருந்தவர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் திடீரென தான் கொண்டுவந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு  ‘இந்தி ஒழிக; தமிழ் வாழ்க’ என்று கோஷமிட்டார். சற்று நேரத்தில் எரிந்து கரிக்கட்டையாக கீழே சாய்ந்தார். இதை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தவர், அவர்மீதான தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை.

இதுகுறித்த தகவலறிந்த கருமலை கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளர் அர்த்தனாரி ஈஸ்வரன், பி.என். பட்டி பேரூராட்சி தலைவர் பொண்ணு வேலு, டி.என். பட்டி திமுக பேரூர் செயலாளர் குமார், வீரக்கல் புதூர் பேரூர் செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததுடன், தங்கவேலு குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.