ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு ரேபிட் கிட் மூலம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் தவறான தகவல்களை கொடுத்தால், அதன் மூலம் சோதனை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,659-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும் 25 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், இந்தியா சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்த ரேபிட்கிட்டை மாநிலங்களுக்கு அனுப்பி கொரோனா சோதனை செய்ய அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, அனைத்து மாநிலங்களும் ரேபிட் கிட் மூலம் கொரோனா சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ரேபிட் கிட் மூலம் நடத்தப்பட்ட சோதனைகளில் பல தவறுகள் ஏற்பட்டதால், ஐசிஎம்ஆர் அறிவுரைப்படி அதன் மூலம் பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டது.