சென்னை
இந்திய மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகங்களில் 8000 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வரும் கல்வி ஆண்டில் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 8,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்தியாவுக்கான ரஷிய துணை தூதர் ஒலெக் நிகோலாயெவிச் அவ்தீவ் தெரிவித்துள்ளார்.
அவர் சென்னையில் உள்ள ரஷிய கலாச்சார மையத்தில் செய்தியாளர்களிடம்,
”சென்னையில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள ரஷிய கலாச்சார மையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும். பிறகு 17 ஆம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் ரஷிய கல்வி கண்காட்சி நடைபெறும்
என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel