இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் ப்ரீத்தி ஜிந்தா 2003 லிருந்து 2007 வரை பல்வேறு வெற்றிப்படங்களில் கதாநாயகியாக திகழ்ந்ந இவர் 2010 க்குப் பின் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை.
2018 ம் ஆண்டு வெளிவந்த பையாஜி சூப்பர்ஹிட் என்ற திரைப்படம் தான் இவர் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம்.
46 வயதாகும் ப்ரீத்தி ஜிந்தா சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைக்குத் தாயானார்.
தனது கணவருடன் எடுத்துக்கொண்ட செல்பியுடன் இந்த விஷயத்தை கடந்த வாரம் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்ட ப்ரீத்தி தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் துபாய் சென்ற விமானத்தில் ஏறிய ப்ரீத்தி ஜிந்தா தன்னை யாரும் எளிதில் அடையாளம் காணமுடியாத வகையில் உடையணிந்திருந்தார்.
அதே விமானத்தில் பயணம் செய்த நடிகர் சஞ்சய் கானுக்கும் இவரை அடையாளம் தெரியாமல் போகவே அவரது மகள் சிமோன் அரோரா ப்ரீத்தி ஜிந்தாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வுக்காக ப்ரீத்தி ஜிந்தாவுக்கு வருத்தம் தெரிவித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள சஞ்சய் கான் “நீங்கள் ஏதாவது பேசியிருந்தால் உங்கள் குரலை வைத்து அடையாளம் கண்டிருப்பேன், ஆனால் எனது மகள் மூலம் உங்களை தெரிந்து கொண்டதற்க்காக ஒரு ஆண்மகனாக வருத்தப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். சஞ்சய் கானுக்கு இப்போது வயது 80.
சஞ்சய் கானின் இந்த பதிவிற்கு ப்ரித்தி ஜிந்தாவிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை.