டெல்லி: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் 80% கொரோனா பாதிப்பு உள்ளதாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி கூறினார்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்தாலும், தமிழகம் உள்பட சில மாநிலங்களிவ்ல தினசரி பாதிப்பு 2ஆயிரத்துக்கும் மேலாகவே தொடர்ந்து வருகிறது. மேலும் 3வது அலையின் தாக்கம் விரைவில் இருக்கும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, கொரோனா 3 வது அலை பற்றி பேச்சுக்கள் இருக்கும் ஒரு கட்டத்தில் நாம் இருக்கிறோம். கடந்த சில நாட்களில், இந்த 6 மாநிலங்களிலிருந்து 80% புதிய வழக்குகள் வந்துள்ளன என்று அறிவுறுத்திய பிரதமர், இனி வரும் நாட்களில் உருமாற்றம் அடைந்து வரும் வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும், நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த கண்காணிக்க வேண்டும் என்று கூறியதுடன், ‘டெஸ்ட்-ட்ராக்-ட்ரீட்-தடுப்பூசி’ அணுகுமுறையை மையமாகக் கொண்டு நாம் முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.