சென்னை: சென்னையில் செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரயிலில், ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளது.
சென்னை மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளது மெட்ரோ ரயில். மேலும் குளு வசதியுடன் பாதுகாப்பான மற்றும் விரைவான வசதியை வழங்கி வருகிறது. அதனால் சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதையடுத்து, , மெட்ரோ ரயில் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி முதல், சோழிங்க நல்லூர் வரையும், வடக்கே மாதவரம் வரையும் மெட்ரோ ரயில் திட்டம் 2, திட்டம் 3க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக அமலுக்கு வரும்போது சென்னையில் போக்குவரத்து நெரிசல் பாதி அளவுக்கு குறைந்த விடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சென்னையில் கடந்த மாதம் (ஏப்ரல் 2024) 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளனர் . அதாவது, 01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகளும், 01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகளும், 01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகளும், 01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 08.04.2024 அன்று 3,24,055 பயணிகள் மெட்ரோ இரயில்களில் gயணம் செய்துள்ளனர்.
2024, ஏப்ரல் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 33,34,498 பயணிகள் (Online QR 1,88,118; Static QR 2,18,565; Paper QR 19,58,328; Paytm3,76,100; Whatsapp – 3,55,571; PhonePe – 2,26,008; ONDC – 11,808), பயண அட்டைகளை(Travel Card Ticketing System) பயன்படுத்தி 33,23,602 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 61,976 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 4,285 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 13,63,351 பயணிகள்மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர்குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000)மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.
மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.