போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் இருந்து ரூ. 3.57 கோடி கடன் வாங்கிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி வங்கி கணக்குகள் மற்றும் க்ரெடிட் கார்டுகள் மூலம் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து பர்சனல் லோன் வாங்கிய 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கி மோசடி தொடர்பாக சென்னை மாநகர் காவல்துறை ஆணையரிடம் ஐசிஐசிஐ வங்கி தலைமை மேலாளர் வழங்கியுள்ள இந்த புகாரில் வங்கி அதிகாரிகள் துணையுடன் இந்த மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Eight people were arrested for floating fake ICICI Bank accounts and availing ₹3.57 crore loan through the bank accounts. pic.twitter.com/pQUG59AapL
— A Selvaraj (@Crime_Selvaraj) April 27, 2024
மொத்தம் ரூ. 3.57 கோடி கடனாக வாங்கிய நிலையில் இந்த தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.