னாமா

ரபு நாடான பெஹ்ரைனில் புதியதாக 8000 கோடி பாரல் அளவில் எண்ணெய் வளம் உள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

உலகின் அதிக எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் அரபு நாடுகள் முதலிடம் வகிக்கின்றன.   மேலும் எண்ணெய் வளம் குறித்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.    அரபு நாடுகளில் ஒன்றான பெஹ்ரைன் நாடு அமெரிக்க தனியார் தொழில் நுட்ப வல்லுனர்களுடன் இது குறித்து ஒப்பந்தம் இட்டுள்ளது.

அதன் படி புதிய எண்ணெய் வளம் பெஹ்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.  இது குறித்து பெஹ்ரைன் அரசின் ஷேக் முகமது பின் கலிஃபா, “பெஹ்ரைனில் புதிய எண்ணெய் வளம் கண்டறியப் பட்டுள்ளது.   நாட்டின் மேற்கு கடற்கரை ஓரத்தில் கண்டறியப்பட்ட இந்த இடத்தில் சுமார் 8000 கோடி பாரல் எண்ணெய் எடுக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெஹ்ரைன் நாட்டின் தேசிய எண்ணெய் கழகம், “தற்போது புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் உள்ள இடத்தி இருந்து முதலில் இரு கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.   இன்னும் 5 வருடங்களில் முழு அளவில் எண்ணெய் எடுக்கும் பணி தொடங்கப்படும்.  அத்துடன் ஏற்கனவே நாட்டில் உள்ள எண்ணெய் வளத்துடன் இந்த கிணறுகளும் சேர்ந்து அரசின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்”  என தெரிவித்துள்ளது.