பூண்டு விலை கடந்த ஒரு மாதத்தில் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

180 ரூபாய் விற்கப்பட்ட பூண்டு தற்போது 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.

பூண்டு விலையேற்றத்தால் பூண்டு சாப்பிடும் மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

இந்த நிலையில் உ.பி. மாநிலம் மஹோபா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காய்கறி மொத்தவிலை சந்தையில் 8 மூட்டை பூண்டு திருட்டுப்போயுள்ளது.

உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு மொத்த வியாபாரியான முகமது இம்ரான் என்பவரின் கடையில் திருடப்பட்டிருக்கும் இந்த பூண்டு மூட்டைகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 60000 என்று கூறப்படுகிறது.

இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு மறுநாள் காலை கடையை திறந்த மூட்டைகளை எண்ணிய போது 8 மூட்டை பூண்டு திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முகமது இம்ரான் இதுகுறித்து மஹோபா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூண்டு விலை அதிகரித்துள்ள நிலையில் மக்கள் தங்கள் உணவுப் பொருளுக்காக திருட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறித்து அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.