சென்னை: தமிழகத்தில் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் பல இடங்களில் திமுக முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்றுகளிலும் 500 தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.

காலை 8.30 ணி வரை வரை எண்ணப்பட்ட தகவல்களில் 9 இடங்களில் திமுகவும்,5 இடத்தில் அதிமுகவும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேளச்சேரி தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானா முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மேற்கு வங்கத்தில் திரிணாமுல் 6, பாஜக 3 இடங்களிலும் முன்னிலை.
- கேரளாவில் இடதுசாரி கூட்டணி 7, காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலை.
Patrikai.com official YouTube Channel