அஜித் – யுவன் கூட்டணியில் 7ஆவது முறையாக ‘நேர்கொண்ட பார்வை’…!

Must read

போனி கபூரின் லட்சிய தமிழ் படமான “நேர்கொண்ட பார்வை” ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிங்கப்பூர் திரையரங்குகளில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது.

அஜித் , ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா தாரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ள, இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார்.

நாளை வெளியாகும் அஜித்தின் இப்படத்தில் 7ஆவது முறையாக யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அஜித் – யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வந்த படங்களில் சூப்பர் ஹிட் பாடல்கள் ;

தீனா:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , யுவன் இசையில், எஸ்பி பாலசுப்ரமணியம் பாடிய வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடலும், பவதாரினி, மகாலட்சுமி பாடிய நீ இல்லை என்றால் என்ற பாடலும் மாஸ் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளன.

பில்லா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் யுவன் கூட்டணியில் மை நேம் இஸ் பில்லா, சேவல் கோடி, வெத்தலைய போட்டேன்டி ஆகிய பாடல்கள் மாஸ் பாடல்களாக அமைந்துள்ளன.

ஏகன்

ராஜூ சுந்தரம் இயக்கத்தில் ஓடும் வரை வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே என்ற பாடல்ஹிட் கொடுத்தது .

மங்காத்தா

வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் விளையாடு மங்காத்தா என்ற பாடல் படு மாஸ்.

பில்லா 2

சக்ரி டோலட்டி இயக்கத்தில் வந்த இப்படத்தில் மதுரை பொண்ணு என்ற பாடல் மாஸான பாடலாக அமைந்துள்ளது.

ஆரம்பம்

இப்படத்தில் வரும் அடடா ஆரம்பமே, ஸ்டைலிஷ் தமிழச்சி ஆகிய பாடல்கள் மாஸ் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளன.

More articles

Latest article