டெல்லி:
த்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் ஜனவரியில் இருந்து அமல்படுமத்த மத்திய அரசு  ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி 7 மாத அரியர் பணம் மொத்தமாக ஆகஸ்டு மாதத்தில் வழங்கப்படும் என்றும் தற்போது மத்திய  அரசு  அறிவித்து உள்ளது.  இது மத்திய அரசு ஊழியர்களுக்கு லக்கி பிரைஸ் ஆகும்.
7-வது ஊதியக் குழு பரிந்துரையைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதன்படி ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது. மத்தி அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச சம்பளம் ரூ.90 ஆயி ரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு சம்பள உயர்வு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். இதர படிகள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் வரை , தற்போதைய விகிதாச்சாரப்படியே இதர படிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்நிலையில், 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும்.
ஏற்கனவே வேலை செய்த 7 மாதத்திற்கான  நிலுவைத் தொகை  ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.