சென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக)  உட்கட்சி தேர்தல்  குறித்து  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.

அதன்படி, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் 7ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று உட்கட்சி தேர்தலுக்கான அறிவிப்பை அதிமுக தலைமைக்ழகம் வெளியிட்டு உள்ளது.

அதில், அதிமுக சட்டவிதி-30ன் பிரிவு-2ன்படி, கழக அமைப்புகளின் பொதுத்தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்க ஒருமுறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கேற்ப தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கழக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் 7ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தேர்தல் ஆணையாளர்களாக  பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேட்புமனுத்தாக்கல்  3-ம்தேதி (வெள்ளிக்கிழமை)  4ந்தேதி சனிக்கிழமை காலை 10மணி முதல் மாலை 3மணி வரை. 

5ம் தேதி காலை 11.25 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்கள் பரிசீலனை 

வேட்பு மனுக்களை திரும்பப்பெற 6-ம்தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள்

7ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு – காலை 10மணி முதல் மாலை 5மணி வரை 

வரும் 8-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகும்

இவ்வாறு அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிளைக்கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்டக்கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் வரும் 13ந்தேதி முதல் 23ந்தேதி வரை 2 கட்டங்களாக ந நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.