டில்லி

ரே நாளில் இந்தியாவில் 797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  கடந்த 26 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஜே.என்.1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்ததாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 225 நாட்களில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.   கடந்த மே 19 ஆம் தேதி இதற்கு முன்பு 865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிர மாநிலம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது.