சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தெரிவித்துள்ளபடி, இன்று புதியதாக 776 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 567 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
இன்று 400 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை குணமானோர் எண்ணிக்கை- 6282 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மேலும் 7 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை- 94 ஆக அதிகரித்து உள்ளது.
மே 19 நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை ஒரு மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அவர்களில் 12,673 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதியாகி உள்ளது.
மாநில சராசரி ஒரு மில்லியன் மக்களுக்கு 4070 பேருக்கு கொரோனாசோதனைகள் நடத்தப்படுவ தாகவும், இது தேசிய அளவில் சராசரி 1821 என்றும், தமிழகத்தில் அதிக அளவிலான சோதனைகள் நடத்தப்படுவதாலேயே நோய் பாதிப்புகள் தெரியவருகிறது, இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.