டெல்லி: நாட்டின் 75வது குடியரசு தினத்தையொட்டி,  80ஆயுதப்படை வீரர்களுக்கு வீர தீர விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருது களை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார். கீர்த்தி சக்ரா, சௌர்ய சக்ரா ஆகிய இரண்டும் மரணத்திற்குப் பின் வழங்கப்படும். இந்த விருதுகள் முறையே போர்க்கால மகா வீர் சக்ரா மற்றும் வீர் சக்ரா விருதுகளுக்கு சமம்.

இந்திய நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 80 ஆயுதப் படை வீரர்களுக்கு கேலண்ட்ரி விருதுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.  இதில், வீர மரணமடைந்த 12 வீரர்களுக்கும்  அடங்குவார். . இந்த விருதுகளில் 6 கீர்த்தி சக்ரா, 16 செளர்ய சக்ரா, 53 சேனா பதக்கங்களும் அடக்கமாகும். இந்த விருதுகள்  அனைத்தும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்படவுள்ளது.

அசோக சக்ரா விருதுக்கு பிறகு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த கேலண்ட்ரி விருதான கீர்த்தி சக்ரா விருதை மேஜர் திக்விஜய் சிங் ராவத் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறை அதிகாரிகளான மோகன் லால், அமித் ரெய்னா, ஃபரோஸ் அகமது தார் மற்றும் வருண் சிங் ஆகியோருக்கு சௌர்ய சக்ரா விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறது.

இதனிடையில் நாட்டின் 75வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜனாதிபதி ஆற்றிய உரையில், “இந்திய ஜனநாயக அமைப்பு மேற்கத்திய ஜனநாயகத்தை விட மிகவும் பழமையானது. இது மாற்றத்திற்கான காலம், தேசம் அமிர்த காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் உள்ளது.