சென்னை: 75 வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில்,  சென்னை காமராஜர் சாலையில் நினைவு தூண் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

2021 ஆகஸ்டு 15ந்தேதி இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு, சுதந்திர வைர விழா நினைவுத் தூண், சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் நிறுவ முடிவு செய்துள்ளது. இந்த தூண் ரூ. 1.83 கோடியில் அமைக்க  தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான டெண்டரை தமிழ்நாடு பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்டு 2ந்தேதி அன்று குடியரசு தலைவரால் நடத்தப்படும் என கூறப்படுகிறது.. இந்த நினைவு தூண் ஒரு மாதத்திற்குள் கட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தமிழக முதல்வராக கருணாநிதி பதவி வகித்தபோது, சென்னை கடற்கரை ஐ.ஜி.அலுவலகம் எதிரே சுதந்தி தின பொன்விழா நினைவுதூண் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.