சென்னை: நாட்டின் 75வது அரசியலமைப்பு நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை யில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசியலமைப்பு நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அரசியலமைப்பு முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.
சம்விதான் திவாஸ் என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினம், ஜனவரி 26, 1950 இல் நடைமுறைக்கு வந்தது. 1949 இல் இந்திய அரசியல மைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சம்விதான் திவாஸ் என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினம், கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாட்டின் 75வது அரசியமைப்பு தினம் என்பதால். அதை சிறப்பாக கொண்டாட மத்தியஅரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலினும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75 ஆம் ஆண்டை முன்னிட்டு, நவம்பர் 26 ஆம் தேதி அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க உத்தரவிட்டுள்ளார்.
75 ஆவது ஆண்டையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்து பதிவிட்டு வருகின்றனர். நாடாளுமன்ற இரு அவையில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு, அரசியமைப்பு குறித்து பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தசென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலி மற்றும் அமைச்சர்களும் பல்வேறு துறை சார்ந்த செயலாளர்களும் அரசியலமைப்பு முகவுரையை வாசித்து அவர்களும் உறுதிமொழி