சென்னை: நாகை  வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாகப்பட்டிணத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி (தி்ங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி கொடியேற்றம் மிக எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற உள்ளது.

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி,   இன்று முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சென்னை, பெங்களூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தஞ்சை, திருச்சி, சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, பட்டுக்கோட்டையில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. குழுவாக பயணம் செய்ய விரும்புவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்து இயக்கப்படுகிறது என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை வேளாங்கண்ணி மாதா திருவிழா: சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கம்…