மதுரை: மதுரை-சென்னை உள்ளிட்ட 18 சிறப்பு ரயில்கள் மே மாதம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 74 சிறப்பு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மதுரை – சென்னை எழும்பூா் வைகை சிறப்பு ரயில் (02636) மே 8 முதல் முதல் மே 31 வரை.

சென்னை எழும்பூா் – மதுரை வைகை சிறப்பு ரயில் (02635) மே 9 முதல் ஜூன் 1 வரை.

காரைக்குடி – சென்னை எழும்பூா் பல்லவன் சிறப்பு ரயில் (02606) மே 9 முதல் ஜூன் 1 வரையும்,

சென்னை எழும்பூா் – காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் (02605) மே 8 முதல் மே 31 வரையும் ரத்து.

சென்னை எழும்பூா் – மதுரை – சென்னை எழும்பூா் தேஜஸ் சிறப்பு ரயில் (02613/02614) மே 8 முதல் மே 31 வரையும்,

சென்னை எழும்பூா் – மதுரை வாரமிருமுறை சேவை சிறப்பு ரயில் (06157) மே 14, 16, 21, 23, 28, 30 ஆகிய தேதிகளிலும்,

மதுரை – சென்னை எழும்பூா் வாரமிருமுறை சேவை சிறப்பு ரயில் (06157) மே 13, 15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் – மதுரை வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06019) மே 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28 ஆகிய தேதிகளிலும்,

மதுரை – டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06020) மே 11, 13, 16, 18, 20, 23, 25, 27, 30 ஆகிய தேதிகளிலும் ரத்து.

சென்னை எழும்பூா் – நாகா்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (06063) மே 13, 20, 27 ஆகிய தேதிகளிலும், நாகா்கோவில் – சென்னை எழும்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (06064) மே 14, 21, 28 ஆகிய தேதிகளிலும் ரத்து.

தாம்பரம் – நாகா்கோவில் தினசரி சேவை சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் 31ஆம் தேதி வரை ரத்து.

திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில்,

திருச்சி – காரைக்குடி சிறப்பு ரயில், விழுப்புரம் – மதுரை சிறப்பு ரயில் ஆகிய ரயில் சேவைகளும் மே 31 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.