சென்னை: மத்திய அரசின் இன்ஸ்பயர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 733 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் முழுவிவரம் வெளியாகி உள்ளது.
அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளுக்கு, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் இன்ஸ்பையர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு நடப்பாண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த 733 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் இன்ஸ்பயர் விருதுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அறிவியல் புத்தாக்க ஆய்வுகளை மேற்கொள்வதால் கிடைக்கக்கூடிய அளப்பரிய ஆனந்தத்தை மாணவர்களிடையே எடுத்துரைத்து, இளம் வயதிலேயே அவர்களை அறிவியல் ஆய்வுகளில் ஈர்த்து, நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத் துறையிலும், ஆராய்ச்சி அபிவிருத்திப் பணிகளிலும் மனிதவளத்தை அதிகரிக்கச் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன்படி 2022-23 ஆண்டுக்கான இன்ஸ்பயர் விருதுக்கு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேர், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேர், காஞ்சிரம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர்,
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேர், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர் என தமிழகம் முழுவதும் 733 மாணவ மாணவிகள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான பட்டியலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு இன்ஸ்பயர் விருதுடன் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்ஸ்பயர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரங்களை காண கீழே உள்ள பிடிஎஃப் பைலை திறக்கவும்…