சென்னை:

மிழகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. சென்னை கடற்கரையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள், நீதிபதிகள், உயர் அதிகார்கள் என ஏராளமானோர்  கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து குடியரசு தின அணிவகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று காலை நிகழ்ச்சிக்கு வந்த  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து,   மெரினாவில் ஐஜி அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்று கொண்டார். தொடர்ந்து. மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு துறைகளின் சாதனைகளை விளக்கும் வாகன அணிவகுப்பு ஆகியவை நடைபெறுகின்றன.

குடியரசு தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியரசு தின விழாவையொட்டி மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்ட உள்ளது. சென்னை  விமான நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு  பேருந்து நிலையம் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது.