சென்னை:
ந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிள்ளையார்சுழி போட்ட, கொரோனா ஹாட்ஸ்பாட்டான  டெல்லி தப்லிகி  ஜமாத்தில் கலந்துகொண்ட 700 பேர் ஊரடங்கால் டெல்லியில், மாநில அரசால்  தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். அவர்கள் தற்போது தமிழகஅரசின் முயற்சியால்  தமிழகத்துக்கு திரும்பி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணமாக டெல்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாடு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் விவரம்சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த 700 தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் தமிழகம் திரும்பாத நிலையில், அவர்கள் டெல்லி மாநில அரசால் பிடிக்கப்பட்டு,  கடந்த 40 நாட்களுக்கும் மேலாக   அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைக்கப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
அவர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும்படி டெல்லி மாநில அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த 700 ஜமாத் உறுப்பினர்களையும் , சொந்த மாநிலத்துக்கு அனுப்ப கெஜ்ரிவால் அரசு முடிவு செய்தது. அதற்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு 700 தப்லீகி ஜமாத் உறுப்பினர்களுடன் சென்னை புறப்பட்டது. இந்த ரயில் நாளை சென்னை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை தமிழகம் அவர்கள் அனைவருக்கும் ரயில் நிலையத்தில் கொரோனா சோதனை நடத்தப்படும் என தெரிகிறது.