டில்லி,
70ஆண்டுகால கருப்பு பணத்தை வலிமையோடு எதிர்கொள்கிறோம், அதன் காரணமாக புதிய நடைமுறை உருவாக்குவோம் என்றார். அருண்ஜேட்லி.
மேலும் புதிய ரூபாய் நோட்டுக்கள் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்படுவதால், புழக்கத்திற்கு வர கால தாமதமாகிறது என்றார் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி.
arun
இன்று டில்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது ரூபாய் நோட்டு குறித்த தகவல் களை கூறினார்.
மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி டில்லியில்  நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் 70 ஆண்டுகளாக கருப்பு பணம் உள்ளது. அவற்றை வலிமையோடு எதிர் கொண்டு புதிய நடைமுறையை உருவாக்க விரும்புகிறோம். அதன் எதிரொலியாகத்தான்  ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
block money
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை விரைவில் சீரடைந்துவிடும். அதன்பிறகு தொழில் நுட்பத்தில் பணபரிமாற்றம் அதிகமாகும். வரிமுறை மற்றும் வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும்,  வியாபாரம் பெருகும் என்றார்.
மேலும், அதே நேரத்தில் பணம் உபயோகிக்கும் அளவு குறையும். கடந்த ஆண்டைபோல, இந்த ஆண்டும் இந்தியா வின் பொருளாதாரம் அதிக அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால்,  தற்போது சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் இன்னும் சில காலத்தில்  பல நன்மைகள் உருவாகும் என்றும் கூறினார்.
தற்போது அச்சிடப்படும்  புதிய ரூபாய் நோட்டுகள் மிகுந்த பாதுகாப்புடன் அச்சிடப்படுகின்றன. அதனால்தான்  புதிய ரூபாய் நோட்டுக்கள்  வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரியாகும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்