கே.எல் புரொடக்ஷன்ஸ் சார்பில் கரிகாலன் தயாரிப்பில், வைகறை பாலன் இயக்கத்தில் , ஐ.இ.பாபுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ‘சியான்கள்’.
மப்பு ஜோதி பிரகாஷ் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படம் மேற்குத் தொடர்சி மலைப் பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறதாம் . மேலும் இப்படத்தில் 70 அறிமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்களாம்.
சியா என்பது தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், வயதானவர்களை அழைக்க வழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை என்றும் அங்குள்ள மக்களின் மகிழ்ச்சி, வலி மற்றும் உணர்வுகளை உள்ளடக்கிய அழகான வாழ்க்கையை திரையில் காட்ட நாங்கள் முயற்சித்திருக்கிறோம்.” என்றும் கூறியுள்ளார் இயக்குநர் வைகறை பாலன் .