சென்னை: டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட 70 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. 2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழ்நாடு அரச அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பதவி உயர்வு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 70 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த இவர், பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.
சந்தீப் மிட்டல்- ‘சைபர் கிரைம்’ கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி. ஆனார்.
பால நாகதேவி- பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
அன்பு- சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யான இவர் பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.
பிரேம் ஆனந்த் சின்ஹா- தெற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். ஆவடி கமிஷனராக பதவியேற்பார்.
செந்தில்குமார்- மேற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், பதவி உயர்வு பெற்று, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக கூடுதல் டி.ஜி.பி. யாக பதவியேற்பார்.
அனிஷா உஷேன்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.
சங்கர்- ஆவடி போலீஸ் கமிஷனரான இவர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆனார்.
அமல்ராஜ்- அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. யான இவர், தாம்பரம் போலீஸ் கமிஷனராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட அதிகாரிகள் உள்பட 70 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
TN Government தமிழ்நாடு அரசு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
[youtube-feed feed=1]