லக்னோ:

த்தர பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரை அருகே முடிகாணிக்கை செலுத்தி விட்டு, கங்கை நதியில் இறங்கி நீராடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தன்று உ.பி.அம்ரோகா மாவட்டத்தை சேர்ந்த 10 பேரை  ஒரு குடும்பத்தினர், வேண்டுதல் காரணமாக, முடிகாணிக்கை செலுத்த பிரிஜ்காட் பகுதிக்கு வந்திருந்தனர். அங்கு தங்களது முடிகாணிக்கையை செலுத்திவிட்டு,  அங்குள்ள கங்கை நதியில் குளித்தனர்.

அப்போது சிலர் ஆழமான பகுதிக்குள் சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களை காப்பாற்ற மற்றவர்களும் தண்ணீருக்குள் சென்ற நிலையில், தண்ணீரில் மூழ்கி 7 இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.  3 பேர் மட்டுமே மற்றவர்களால் காப்பாற்றப்பட்டனர்.

இதுகுறித்து உடடினயாக பேரிடர் மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர். இதுவரை  5 பேரின் உடல்களை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள், பண்டி (21), சஞ்சீவ் (18), மனோஜ் (20), விபின் (21), மற்றொரு சஞ்சீவ் (17), தர்மேந்திரா (16), கவுதம் (20) என அடையாளம் தெரிய வந்துள்ளது. இதில் கவுதம், தர்மேந்திரா உடல்களை தேடி வருகின்றனர்.

கங்கை ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த தகவல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு உ,பி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.