சென்னை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழ்நாடு மீனவர் களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், அடித்து விரட்டுவதும், கைது செய்வதும், தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாகி இருக்கிறது. இதுதொடர்பாக பல முறை மீனவர்களும், தமிழ்நாடு அரசும் மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது.  ஆனால், மீனவர்கள் விவகாரம் தொடர்ந்துகொண்டே உள்ளது.

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கட்ற்படையினர் கைது செய்துள்ளனர்.  ராமேஸ்வர கடற்கரை பகுதியில் இருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த  தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்து செய்து இலங்கை அழைத்துச் சென்றுள்ளது.

இலங்கை துறைமுகத்தில் வைத்து மீனவர்கள் கைது தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் விசைப்படகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதற்கட்ட விசாரணையில் கைதான மீனவர்கள் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.