சென்னை ரெயில் நிலைய மாணவர் மோதல் : தனிப்படை தேடுதல் தொடக்கம்

Must read

சென்னை

ட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள மாணவர்களை 7 தனிப்படை போலீசார் தேடத் தொடங்கி உள்ளனர்.

கொரட்டூர் ரெயில் நிலையத்துக்கும் அம்பத்தூர் ரெயில் நிலையத்துக்கும் இடையே உல்ளது பட்டரவாக்கம் ரெயில் நிலையம்,    இங்கு மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.   இரு பிரிவினரும் அரிவாளுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.    அத்துடன் அங்கிருந்த மக்களையும் அரிவாளைக்காட்டியும், கற்களை வீசியும் மிரட்டினர்.

இதனால் கடும் பதட்டம் ஏற்பட்டது.   காவல்துறையினர் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   கலவரம் செய்த மாணவர்களில் மூவர் பிடிபட்டுள்ளனர்.   கைதான மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் தலைமறைவாக உள்ள மாணவர்களை தேடி வருகின்றனர்.   இதற்காக 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.   அவர்கள் இந்த மாணவர்களை மும்முரமாக தேடத் தொடங்கி உள்ளனர்.

More articles

Latest article